தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 10 அனைத்து பள்ளிகளும் | திறக்கப்பட்டுள்ள நிலையில்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் தேசியகொடியினை ஏற்றிவைத்து முதல் நாள் வகுப்பினை தொடங்கிவைத்தார்.

அப்போது கடந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு தொகையும் வழங்கினார், மேலும் சிறப்பாக பணியாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமாரிக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்,

பின்னர் புதிதாக சேர்ந்துள்ள மாணவிகளுக்கு 2024 25 ஆம் ஆண்டிற்கான பாட புத்தகங்கள் புத்தகங்களை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் வழங்கினார், பள்ளி தலைமை ஆசிரியை செல்வகுமாரி, நகர தலைவர் ரஞ்சித், சட்டமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக எம்எல்ஏ ராதாகிருஷணனுக்கு பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *