புதுவையில் பாழடைந்து கிடக்கும் அரசு குடியிருப்புகளுக்கு குடியேறும் போராட்டம் பாமக அறிவிப்பு!
ச.முருகவேல். சீனியர் ரிப்போர்டர்.
புதுச்சேரி
புதுச்சேரி.
புதுவையில் முன்னாள் கவர்னர் கிரண்பேடி இருந்தபோது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று புதுவையின் பல்வேறு கிராம பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு குப்பைகள் அகற்றவும் மழை நீர் வடிகால் வாய்க்காலில் தூர்வாரவும் முனைப்பு காட்டி வந்தார்.
மேலும் பொதுப்பணித்துறை, மின்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்று மக்கள் நேரடி பார்வையில் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக அந்தந்த துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டு குறைகளை களைய செய்தார்.

ஆனால் அதன் பிறகு புதுவை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் தற்பொழுது உள்ள சிபி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் பணிகளில் அந்த அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது
கடந்த ஆண்டு புதுவை முதல்வர் ரங்கசாமி புதுவை முழுவதும் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு ஒரு தனியாரிடம் ஒப்பந்தம் ஏற்படுத்தினார். புதுப்புது வாகனங்களையும், பேட்டரியில் இயங்கக்கூடிய சிறு வாகனங்களும் வாங்கப்பட்டு குப்பைஅள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
குப்பை அல்லும் வாகனங்கள் சாலைகளில் மிக வேகமாக செல்வதும் போவதுமாக இருக்கின்றதேயொழிய குப்பைகள் சரிவர வாரப்படாமல் கிராமங்களிலும் நகரங்களிலும் குப்பைகள் தேங்கிதான் உள்ளன.
இந்நிலையில் நெட்டப்பாக்கம் வி எஸ் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் பெருமளவில் தேங்கியுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இது சம்பந்தமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இது நாள் வரை குப்பைகள் அகற்றப்படவில்லை. மேலும் இதுகுறித்து நெட்டப்பாக்கம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் குரு கூறுவதாவது… அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் பாழடைந்து கிடப்பதால் அங்கு சமூக விரோத செயல்கள் பெருமளவில் நடக்கின்றது. இந்த குடியிருப்பு பகுதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும்.
இது சம்பந்தமாக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோல் புதுவை முழுவதும் ஆங்காங்கே அரசு குடியிருப்புகள் பராமரிக்கப்படாமல் பாழடைந்து பயனற்று கிடக்கின்றன. அதேசமயம் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் வீடு இல்லாமல், வாடகை வீட்டிலும் தெரு ஓரங்களிலும் குடும்பம் நடத்துகின்றனர். ஆகவே வீடற்ற ஏழைகள் பாழடைந்து போன இந்த அரசு குடியிருப்புகளுக்கு குடியேறும் போராட்டம் நடத்தி குடும்பம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.