ராஜபாளையத்தில் பெண் மர்ம மரணம் கணவனிடம் தீவிர விசாரணை!

ராஜபாளையம் கீழஆவரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (56) கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (50) இவர்களுக்கு 5 பெண்பிள்ளைகள், அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் அய்யாச்சாமி இரண்டாவதாக ஒத்தப்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (40) என்பவரை திருமணம் செய்து 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.
அய்யாச்சாமியிடம் ஜீவனாம்சம் கேட்டு முதல் மனைவி ராமலட்சுமி ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிறுவையில் இருந்து வருகிறது.
நேற்றைய தினம் நீதிமன்றத்திற்கு வாய்தாவுக்குச் சென்ற அய்யாச்சாமி ராமலட்சுமியிடம் வழக்கை வாபஸ் பெறக் கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் தலை, கழுத்தில் காயத்துடன் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் வீட்டில் மர்மமான முறையில் ராமலட்சுமி இறந்துகிடந்தார்.
தகவலறிந்த வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்
பவுல் ஏசுதாசன் எஸ்ஐ கமலக்கண்ணன் மற்றும் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது ராமலட்சுமிக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவ அறிக்கை வந்ததாக கூறப்படுகிறது இதுகுறித்தும் விசாரணை செய்யப்படுகிறது