வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் 71 வருவாய் கிராமங்களுக்கு மூன்று நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் வருவாய்த்துறை உள்ளிட்ட 8 துறை தொடர்பாக 194 கோரிக்கை மனுக்கள் வரப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளது. 1433 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி மன்னார்குடி தனி துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) காந்திமதி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது.
ஆவூர் உள் வட்டத்தை சேர்ந்த அன்னுகுடி, உத்தமதானபுரம் உள்ளிட்ட 31 வருவாய் கிராமங்களுக்கும், 12ஆம் தேதி வலங்கைமான் உள் வட்டத்திற்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட 17 வருவாய் கிராமங்களுக்கும், நேற்று (13ஆம் தேதி) ஆலங்குடி உள் வட்டத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம், பெருங்குடி, மாணிக்கமங்கலம், கொட்டையூர் உள்ளிட்ட 21 வருவாய் கிராமங்களுக்கும் நடைபெற்றது.
முன்னதாக மூன்று நாட்கள் சுழற்சி முறையில் நடைபெறும் ஜமாபந்தியில், பொதுமக்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் அனைத்து வகை சான்றுகள் குறித்த மனுக்களை ஜமாபந்தி அலுவலர்களிடம் கொடுத்து நிவாரணம் தேடிக்கொள்ள வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் பட்டா மாற்றம், பட்டா கோருதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட வருவாய் துறை தொடர்பான 150 கோரிக்கை மனுக்கள் வர பெற்றது. மேலும்முதியோர் உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டத்தினால் வழங்கப்படும் உதவித்தொகைகள் தொடர்பாக 22 கோரிக்கை மனுக்களும், நுகர்பொருள் வாணிப கழகம் தொடர்பாக ஒரு மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பாக 12 மனுக்களும், வேளாண்மை துறை தொடர்பாக நாலு மனுக்களும், பொதுப்பணித்துறை தொடர்பாக மூன்று மனுக்களும் என ஆக மொத்தம் 194 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வர பெற்றன. இவற்றில் ஏழு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.