R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம்
பக்ரீத் பண்டிகை ஈதுகா மைதானத்தில் சிறப்பு தொழுகை பக்ரீத் பண்டிகையை ஒட்டி விருத்தாசலத்தில் சிறப்பு தொழுகையில்
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித்
ஈதுகா மைதானத்தில் விருத்தாசலம் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
புத்தாடை உடுத்தி பக்ரீத் படிக்கையை ஒட்டி உலக அமைதி, சமாதானம் , நோய் அற்ற வாழ்வு அனைவருக்கும் , கிடைக்க வலியுறுத்தியும் நோய் தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு நலமுடன் வாழ இன்று கூட்டுத் தொழுகை செய்தனர்.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதுடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்….