செங்கம் அருகே உழவர் உரிமை இயக்கத்தின்
“செ நாச்சிப்பட்டு கிளை” துவக்க விழா நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிபட்டு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
இந்த கிளை திறப்பு விழாவில் கீழ்கண்ட உறுதிமொழியை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்
உழவர் உரிமை இயக்கத்தின் உறுப்பினராகிய நான் இந்திய அரசியலமைப்பு சட்டம்
வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்தி…
என்னை போன்ற உழவர்களின் வாழ்க்கையை மேம்படுததவும்… உழவுத் தொழிலை மற்ற தொழில்களை விட உயர்ந்ததாக மாற்றவும்..
உழவர்களின் உரிமையை மீட்கவும்..
கட்சி, சாதி, மதம், ஆண் பெண் என்ற பாகுபாடுகளை கடந்து உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் உழவர் உரிமை இயக்கத்தில் இனைந்து எந்த அச்சமுமின்றி உழவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பவும்..
போராடவும் தயங்க மாட்டேன் என்றும்..
வாரத்திற்கு ஒரு நாள் உழவர் உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் உறுதிமொழி ஏற்கிறேன்!
என்று உறுதியேற்று நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்