ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதிப்படுத்திட, கர்நாடக அரசு மேகதாட்டில் அணைக்கட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு சார்பாக புதிய ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதிப்படுத்திட கர்நாடக அரசு மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட குழு சார்பாக புதிய ரயில் நிலைய சந்திப்பு முகப்பு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார்
மாநில பொதுச்செயலாளர்
சாமி நடராஜன் கோரிக்கை விளக்கி கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்
பி.கந்தசாமி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட மாநிலக்குழு உறுப்பினர் கே.தமிழ்செல்வி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதிப்படுத்து வேண்டும்
மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணைக்கட்டும் முயற்சியை ஒன்றிய அரசே தடுத்து நிறுத்திட வேண்டும்,அனைத்து நீர்வரத்து பாசன, வடிகால் வாய்க்கால்களை, ஏரி, குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும்,பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் பாதிப்புக்கு ஏற்ப முழுமையான நிவாரணம் வழங்கிடவேண்டும்100 நாள் வேலை திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்
விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது