ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற 22. உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து கூறிய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழக காவல்துறையில் கடந்த 1999-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் சிறப்பாக பணி நிறைவு செய்த 22 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது
புதிதாக பதவி உயர்வு பெற்ற 22 சிறப்பு உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து கூறி பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து விசாரணை செய்யவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் சட்டம் மற்றும் ஒழுங்கை தலையாய கடமையாக மனதில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்