திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
கலைஞருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரால் எழுதப்பட்ட திரைப்பட பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக திரைப்பட பின்னனி பாடகி மாலதி லக்ஷ்மண் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் மும்பை நாகராஜ் தலைமை வகித்தார்.
மருங்காபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சின்ன அடைக்கண் வரவேற்புரையாற்றினார்.
பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர்
சரண்யா நன்றி கூறினார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.