தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றம்.
ஆண்டுப் பொதுக்குழு கூட்டம்.
தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் 17-06-2024 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மன்றத் தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன் தலைமை தாங்கினார். பாவலர் பெரு. முல்லையரசு முன்னிலை வகித்தார்.
மன்றச் செயலாளர் தமிழ்மகன் ப. இளங்கோ வரவேற்புரை வழங்கினார். கவிஞர் கூத்தப்பாடி மா. பழனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மன்றச் செயலாளர் தமிழ்மகன் ப. இளங்கோ ஆண்டறிக்கை வாசித்தார். மன்றப் பொருளாளர் கவிஞர் இரா. மதனகோபாலன் வரவு செலவு கணக்கு படித்தார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மன்றத்தின் ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
- ஆண்டு விழா மலர் வெளியிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
- கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கவிதைப் போட்டி நடத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- மன்றத்தின் வெளியீடாக மின்னிதழ் ஒன்று வெளியிடலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கவிஞர் ஒருவருக்கு ‘ பாவலரேறு மணிவேலனார் விருது’ வழங்கிச் சிறப்பிக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- மாவட்டத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர் ஒருவருக்கு ‘எழுத்து வேந்தர் தகடூரான் விருது வழங்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- பா எழுதப் பயில்வோம் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் ‘பாவலர் விருது’ வழங்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- தமிழுலகம் அறிந்த கவிஞர் ஒருவரைச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
- தருமபுரி மாவட்டத்திலுள்ள கவிஞர்களை மன்றத்தில் இணைக்க முயற்சி மேற்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் கவிஞர் இரா. மதனகோபாலன் நன்றி நவின்றார்.