கடையநல்லூரில் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது
இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு ,மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி , தலைமை ஏற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தினார்.
இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளை நிர்வாகிகள் இஸ்மாயில் , குத்தூஸ் ,செய்யது மசூது மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித் ,துணைச் செயலாளர் மற்றொரு அப்துல் பாசித்
ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் ஜலாலுதீன் ,ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துல்நாசர் , மக்காநகர் தவ்ஹீத் திடலில் அப்துல் சலாம் , ,தவ்ஹீத் நகர் ரபீக்ராஜா, பாத்திமா நகர் பள்ளி திடலில் சஹாத் இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன் , இ.பி.மஹ்மூதாநகர் மீரான்கனி ,
மதினா நகர் பள்ளி திடலில் அஹ்மது என நகரில் 9 இடங்களில் நடை பெற்றது .
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகளை இறைவனுக்காக பலியிட்டனர் அதன் பின்னர் அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அதை போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் ,வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *