உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு படூர் ஊராட்சியில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
திருப்போரூர்
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை இணைந்து நடத்திய சைக்கிள் பேரணியை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கானத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் படூர் ஊராட்சி மன்ற தலைவர் கே ஏ எஸ் தாரா சுதாகர் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்
இதில் சிறியவர்களுக்கான 10 கிலோ மீட்டர், பெரியவர்களுக்கான 30 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற சைக்கிள் பேரணியில் படூர் அரசு பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழுடன் பதக்கமும் வழங்கப்பட்டது,
நிகழ்ச்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளையின் நிறுவனர் கே ஏ எஸ் சுதாகர், செயலாளர் சங்கீத் உட்பட மக்கள் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.