தேனி அருகே உள்ள வீரபாண்டியில்
கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா.
தேனி மாவட்ட போயர் சமுதாய நலச்சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு நான்காம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்வி மட்டும் தான் நம் முன்னேற்றத்தின் முதற்படி என்றும், மாணவச் செல்வங்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்தி பல துறைகளில் சாதனை படைத்திட வேண்டும் என்று கூறி அவர்களுக்கான பரிசுகளும், ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் கம்பம் நாலந்தா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர் ஹரிதரன் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று தன் பள்ளிக்கும், தனது சமுதாயத்திற்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்தமையால் “அன்பு அறம் செய்” சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா வாழ்த்துக்களை கூறினார்.
உடன் கரூர் உழைக்கும் மக்கள் விடுதலைக் கழக தலைவர் தேக்கமலை பரிசு வழங்கினார்.