தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் கம்பம் நகரில் பக்ரீத் பண்டிகை திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி. எல். ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்து கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியில் ஆடு அறுத்து ஏழை எளிய பொதுமக்களுக்கு குர்பானி வழங்கி பக்ரீத் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் கம்பம் நகர மன்ற உறுப்பினர் கம்பம் சாதிக் மற்றும் முஸ்லிம் மற்றும் இந்துக்களும் மத நல்லிணக்கமாக பங்கேற்று விழாவை சிறப்பு செய்தார்கள்
இந்த விழாவில் பங்கேற்ற அனைவரையும் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா கனிவுடன் உபசரித்தார்