ராஜபாளையத்தில் காங்கிரசார் சார்பில் ராகுல் காந்தி பிறந்த தின விழா! கோவில்களில் சிறப்பு வழிபாடு! இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் நல்லகாந்தி, எம்.பி. 54வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராஜபாளையம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் (சொக்கர்) திருகோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ராஜபாளையம் நகராட்சி முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை உணவு வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் ஆர்.சங்கர் கணேஷ் தலைமையில் விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் ஏ.ரெங்கசாமி முன்னிலை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்சக்தி மோகன், நகர நிர்வாகிகள் ரமேஷ், வெங்கடேஷ், ஏ.பி.எஸ். வெங்கட்ராமன், முத்துகிருஷ்ணராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.