சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
மத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த நசீர்பாஷா மகன் சுராஜ் வயது (27), இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவர் மகன் சித்திக் (26) ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவு மத்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சுங்கச்சாவடி கட்டண வசூல் மையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சித்திக் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுராஜின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மத்தூர் போலீசார் சுராஜ் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.