விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம், சர்ச் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளாதேவி (25) இவர் தனது பெற்றோருடன் குடியிருந்து கொண்டு இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு B.B.A படித்து வந்தபோது வசந்தகுமார் என்பவரின் ஆட்டோவில் அடிக்கடி கல்லூரிக்கு சென்றதில் வசந்தகுமாரும் மஞ்சுளாதேவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் இராஜபாளையம், இராஜுக்கள் கல்லூரி எதிர்புறமுள்ள அம்பேத்கார் நகரில் உள்ள வசந்தகுமார் வீட்டில் குடியிருந்து வருவதாகவும் இவர்களுக்கு 4 வயதில் வினோத்குமாரும்
, 2 வயதில் பிரித்தீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளதாகவும்,கூறப்படுகிறது
இந்நிலையில் கணவர் வசந்தகுமார் அடிக்கடி குடித்துவிட்டு தகாத நண்பர்களுடன் சேர்ந்து ஊர் வம்பை இழுத்து வந்ததாகவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராஜபாளையம் அடுத்த முறம்பில் வசந்தகுமார் நண்பர்களுக்கு நடந்த
ஒரு பிரச்சனையில் ஈடுபட்டதில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெயிலுக்கு சென்று விட்டதாகவும், கணவர் ஜெயிலுக்கு சென்ற நிலையில் மஞ்சுளாதேவி தனியாக இருந்து கொண்டு தனது இரு குழந்தைகளையும் கவனித்து வந்ததாகவும், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கணவர் மேற்படி கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்தவர் வாதியிடம் இராஜபாளையம் தாலுகா, கிருஷ்ணாபுரம், நடுத்தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் குழந்தைவேல்குமார் என்பவருடன் வாதிக்கு பழக்கம் இருப்பதாக சந்தேகப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவியை கம்பால் அடித்துக் காயப்படுத்தியதாகவும், அதன் விபரத்தை பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் வந்து கணவரை சத்தம் போட்டு விட்டு மஞ்சுளாதேவி மற்றும் பிள்ளைகளையும் அவரது அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாகவும், தெரிகிறது இந்நிலையில் பெற்றோர் மற்றும் தங்கை ராம்பிரியா, அண்ணன் பால்பாண்டி, தாய்மாமா கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் இராஜபாளையம், சர்ச் தெருவில் உள்ள வாதியின் அம்மா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அப்போது அங்கு கையில் நீளமான கத்தியுடன் வந்த கணவர் வசந்தகுமார் தன்னை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த நீளமான கத்தியால் இத்தோடு செத்து ஒழிஞ்சுபோ என்று சொல்லி ஒங்கி மஞ்சுளாதேவியை வெட்டியபோது இடது கையால் தடுத்ததாகவும், அந்த வெட்டு வாதியின் இடது கை மணிக்கட்டிலும், தலையின் இடது பக்கத்தில்பட்டு இரத்த காயம் ஏற்பட்டதாகவும் அருகிலிருந்தவர்கள் அவனை தடுத்து சத்தம் போட்டு போக சொன்ன போது கணவர் அங்கிருந்து போகும்போது மனைவியை பார்த்து இன்னைக்கு தப்பிச்சுக்கிட்ட என்னைக்கிருந்தாலும் நான் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்து கத்தியுடன் சென்றுவிட்டதாகவும், கூறப்படுகிறது இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மஞ்சுளாதேவியை மீட்டு இராஜபாளையம் தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலிசார் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாசன் எஸ்ஐ கமலக்கண்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்த வசந்தகுமாரை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பாகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது