திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அடுத்து உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சமிபகாலமாக விருப்ப ஓய்வு வலு கட்டாயமாக அளிக்கப்பட்டு குடியிருப்புகள் காலி செய்யும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்
இந்நிலையில்மாஞ்சோலைச் சார்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் டான்சி போன்ற அமைப்புகள் மூலமாக இவர்களின் வாழ்வாதாரத்திற்க்கு ஏதாவது ஒரு வகையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் இலவச வீடு அல்லது வீட்டு மனை அளிக்க வேண்டும் என்றும் மறு பணி கிடைக்கும் வரை மாதம் பத்தாயிரம் உறுதி தொகை வழங்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு இலவச கல்வி உயர்கல்வி படிப்பிற்கு உறுதி செய்திட வேண்டும் என்றும் இங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு பணி வழங்கிட வேண்டும் என்றும் வாதிட்டார் இதை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மதுரை கிளை நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அமையும் வரை அவர்களின் வாழ்விடத்தை விட்டு வெளியேற்ற தடை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளனர் இந்தத் தீர்ப்பினால் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது