செந்துறை வட்டம் பெரிய குறிச்சி கிராமத்தில் கீழத்தெரு என்ற பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் குடியிருந்து வருகிறார்கள் இந்த மக்களுக்கு கடந்த மூன்று மாதமாக சரியான முறையில் குடிநீர் கிடைக்காமல் இருந்து வருகிறது
பெரியாக்குறிச்சியில் இருந்து பொன்பரப்பி செல்லும் பாதையில் வாட்டர் டேங்க் அமைந்துள்ளது இந்த வாட்டர் டேங்கில் இருந்து கீழத்தெரு கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது தற்பொழுது அந்த குழாய்கள் சேதமடைந்து சரியான முறையில் குடிநீர் கிடைக்காமல் இருந்து வருகிறது
எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதித்து வீட்டுக்கு வீடு இணைப்பு கொடுத்து மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாய் தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் கு. முடி மன்னன் கேட்டுக்கொள்கிறேன். அவர் வெளியிட்டுள்ள என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.