விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ராக்காட்சியம்மன் கோவில் இதை நிர்வாகிகள் குழு அமைத்து பராமரித்து வந்த நிலையில் 30 க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து வழிபாடு நடத்திவந்த நிலையில் சமீப காலமாக சில பிரச்சனைகள் வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் ராக்காச்சி அம்மன் கோவிலை ஆய்வு செய்து பக்தருக்கு உள்ள கஷ்டங்களை கண்டறிய இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் தலைமையில் சென்று ஆய்வு நடத்தியது பக்தர்களிடம் குறையைக் கேட்டு அறிந்தது பக்தர்கள் படும் கஷ்டங்களை நேரடியாக கண்டது தனிமனிதன் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவிலை மீட்டு உண்மையான நிர்வாகிகளிடம் ஒப்படைத்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து கோவிலை முறையாக பராமரிக்க தேவையான நடவடிக்கள் எடுக்கவேண்டி அனைத்து விதமான போராட்டங்களிலும் இறங்குவது என்று முடிவு செய்யப்பட்டது
பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்