திருவள்ளூர் ஜூன் 26
பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் புதிய மின்மாற்றி வார்டு கவுன்சிலரும் பொன்னேரி நகர திமுக துணைச் செயலாளரு மான பரிதா ஜெகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சி உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் மின் பற்றாக் குறை உள்ளதாக அப்பகுதி மக் கள் விவசாயிகள் புகார் தெரிவி த்து மேற்கண்ட பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தரு மாறு கோரிக்கை விடுத்தனர்.
இவர்களது கோரிக்கையை அடுத் து நான்காவது வார்டு கவுன்சிலர் பரிதா ஜெகன் மின்வாரிய அலுவ லகத்தை தொடர்பு கொண்டு வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின் பற்றாக்குறை உள்ளதாகவும் என வே புதிய மின் மாற்றி அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை ஏற்று சுமார் ஆறு லட்சம் மதிப்பீட்டில் 100 கேவி கொண்ட புதிய மின்மாற்றி நான்காவது வார்டில் அமைக்கப் பட்டது.
இதனை பொன்னேரி நகர திமுக துணைச் செயலாளரும் 4- வது வார்டு கவுன்சிலருமான பரிதா ஜெகன் பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர் செல்வம், உதவி பொறியாளர் வெற்றிவேல், அலுவலக முதல் நிலை முகவர் தியாகராஜன், கூடுதல் முதல் நிலை முகவர் ஆர். பாண்டியன், லைன் மேன் டில்லி பாபு, மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பார்த்திபன், ரஜினி, பாண்டியன், ராஜ்குமார், சுமன், ஸ்ரீதர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.