தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ ஜெட்டி அள்ளி ஊராட்சி, அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி துவக்கி வைத்தார்

தீவிர வயிற்றுப்போக்கு முகாமில் 1 7 2024 முதல் 31 8 2024 வரை இரு மாத காலம் நடைபெறும் முகாமில் 1.36 லட்சம் குழந்தைகளுக்கு ஓ ஆர் எஸ் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது

1.7.2024 முதல் 31.7 .2024 வரை ஒரு மாதம் நடைபெறும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.31லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் A திரவம் வழங்கப்பட உள்ளது.

இந்த முகாம்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1336 அங்கன்வாடி மையங்களிலும் 52 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 225 துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவர் மனைகளிலும் வழங்கப்பட உள்ளது

தர்மபுரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும்மிகவும் தொலைவில் உள்ள மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணிகளையும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *