பெரம்பலூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மதுவணிகம் எனும் மரண வியாபாரத்தை நிறுத்தக்கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் குதரத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ் அலி வரவேற்புரை வழங்கினார் ,திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் தங்கராசு, பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தாமோதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.