வலங்கைமானில் சங்கடங்கள் தீர்க்கும் ஜெயவீர ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் பிம்ப பாலாலயம் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் ஸ்ரீ ராம பவனத்தில் அமைந்துள்ள சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம் பழமையான ஓட்டு கட்டிடத்தில் இருந்து வருகிறது.
இவ்வாலயத்தை புதுப்பித்து புதிய ஆலயம் கட்ட பக்தர்கள் முடிவெடுத்து பிம்ப பாலாலயம் நடைபெற்றது.
பூஜைகளை சர்வசாதகம் கோனேரிராஜபுரம் ஸ்ரீ ஆகம அலங்கார கலாநிதி ஸ்ரீ ஸ்ம்பத் பட்டாச்சாரியர், விஷ்ணுபுரம் ஆன்மீக ஜோதி ஸ்ரீ வெங்கடேஷ் பட்டாச்சாரியர் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் ஸ்ரீ ஆஞ்சநேயர் தாஸன் என். ராமச்சந்திரன், வலங்கைமான் பப்பு சகோதரர்கள், சென்னை டி ஆர் சண்முகம்- அங்கயற்கண்ணி, மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி தாஸர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.