தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் ஷ ஜீவனா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 442 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.13,349/- மதிப்பிலான ஸ்மார்ட்போன் 7 மாற்றுத்திறனாளிகளுக்கும், தலா ரூ.13,200/- மதிப்பிலான டெஸ்சி பிளையர் 3 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.33 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், தனித்துணை ஆட்சியர் ஜி.முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .வெங்கடாசலம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்