விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாலையாபுரம் பகுதியில் வசித்துவருபவர் ராமர் மகன் ஜெயபாலன்(27) தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்
இந்நிலையில் வேலைக்கு சென்று திரும்பிவந்து
மாலையில் தனது இருசக்கர வாகனத்தில் இராஜபாளையம் டவுணிற்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு இரவு 10.00 மணிக்கு வீட்டிற்கு திரும்ப வந்து வண்டியை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு படுத்து தூங்கி விட்டதாகவும் காலையில் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது தான் நிறுத்தி வைத்திருந்த வண்டியை காணவில்லை என்று ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அதேபகுதியை சேர்ந்த லிங்கராஜ் மகன் ரஞ்சித்குமார் பைக்கை திருடி மறைத்து தெரிய வந்தது இதனையடுத்து போலிசார் ரஞ்சித்குமாரை கைது செய்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்