தென்காசி மாவட்டத்தில் வரும் 16.07.2024 அன்று வி.கே.சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க இருப்பதாக அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் தோழியும், கடந்த காலங்களில் அதிமுகவின் அதிகார மையமாகவும் திகழ்ந்த வி கே சசிகலா வரும் 16.07.2024 முதல் 20.07.2024 வரை தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிமுக வழக்கறிஞர் பூசைத்துரை தலைமையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமாரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.அந்த மனுவில்
அஇஅதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வருகின்ற 16-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், 17-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாட உள்ளார்.

இந்த நிலையில், வருகின்ற 16-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் சசிகலாவிற்கு இலத்தூர் விலக்கு ரவுண்டானா பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 16-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சசிகலா நேரில் சென்று பொது மக்களை சந்திக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், அதற்குண்டான அனுமதியையும் பெறுவதற்காக இன்று அதிமுக கழக நிர்வாகியான வழக்கறிஞர் பூசைத்துரை தலைமையில், குத்துக்கல்வலசை செல்வம், சின்ன ஆணைக்குட்டி பாண்டியன், செந்தூர் பாண்டியன், ரமேஷ் பாண்டியன், சுந்தரராஜன், பண்பொழி பேரூர் உறுப்பினர் சுப்பையா கண்ணு, சுரேஷ், சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அவருடன், பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்த நிலையில், அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவையான பாதுகாப்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தாத அவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *