பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக கட்டிடங்களும் அமைந்துள்ளது. இதில் பல கட்டிடங்கள் வணிக பயன்பாட்டு அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாகவும் பல கட்டிடங்கள் விதியை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்
இதைத்தொடர்ந்து நேற்று கடைகளுக்கு சீல் வைக்க வந்த நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகளை மகாலிங்கபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக விதி மீறிய 66கடைகளுக்கும் சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் 40 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர்.
எனவே மீதமுள்ள 26 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர் இதனால் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது