கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது சரியானது அல்ல என தெரிவித்தார். மேலும் அரசு மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து செய்வதற்கு சில இடையூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறிய அவர் வாட்ஸ் அப் யில் எதும் தகவல்கள் வந்தாலும் தங்களது சென்று நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார்.