பழனி நகரில் திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்து முழு கடையடைப்பு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு.
மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தனிநபர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கிரி வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மலையடிவாரத்தில் உள்ள வணிகக் கடைகள் தேவஸ்தான நிர்வாகத்தால் அகற்றப்பட்டு வருகிறது.
இதில் ஏராளமான பட்டா நில உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரிவலப் பாதை நகராட்சிக்கு சொந்தமானது என்பதை மறைத்து திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு தடையானைகளை பெறுவதாக பழனி நகர் மன்றம் சார்பாக முழு கடையடைப்பு அறிவித்தன.
நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பல ஆண்டுகளாக பொதுமக்களும், விவசாயிகளும் சென்று வந்த பாதைகளை அடைப்பதை கண்டித்தும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் அரசு மற்றும் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் சங்க பேரமைப்பு முழு ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும் பழனி நகராட்சி கடைகள், மலையடிவாரத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட 67 சங்கங்களை சேர்ந்த கடைகள் அடைக்கப்பட்டனர்.
பழனி நகர மக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்காத வகையில் தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜே.பி. சரவணன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் மாநில துணை தலைவர் கன்பத் ஹரிஹரமுத்து,மாநில இணை செயலாளர் கந்தவிலாஸ் பாஸ்கரன்
மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கார்த்திகேயன் வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார்,
செல்வம் ஸ்டோர் சம்பத், செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ்,வழக்கறிஞர் மணிக்கண்ணன்
விடுதி சங்க ரம்யாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி தவ்பிக்,மற்றும் ஜெபக்கனி ராஜ், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..