ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமிற்குசிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய தலைவர் பெருந்தலைவர் P.வடிவேல் அவர்கள் தலைமை தாங்கினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி முன்னிலை வகித்தார் அவர் பேசுகையில் மண் வளம் காக்கபசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து 45வது நாளில் மடக்கி உழுது விடவேண்டும் என கூறினார்.
முகாமில் தக்கைப்பூண்டு விதைகள், பண்ணை இயந்திரங்கள், நெல் விதைப்பு கருவி, துவரை வரப்பு பயிர் ஆகிய இடுப்பொருட்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் .
செய்தியாளர் திமிரி வெங்கடேசன்.