தாராபுரம் செய்தியாளர் பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி வளாகம் முன்பு, எளிய ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் 3″வது முறையாக அறிவித்து உள்ள ஐந்து சதவீத மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், தாராபுரம் நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலையில் எளிய ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மூன்றாவது முறையாக அறிவித்துள்ள ஐந்து சதவீத மின் கட்டண உயர்வை கண்டித்தும் ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதை கண்டித்தும்..
ஏப்ரல் மாதம் முதல் நியாய விலை கடைகளில் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு போன்றவைகளை வழங்காமல் மக்களை துன்புறுத்துளளாகுவதை கண்டித்தும்,
சொத்து வரி உயர்வு,குப்பை வரி உயர்வு,குடிநீர் கட்டண உயர்வு,பால் பொருட்களின் விலை உயர்வு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு,அரசு பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு அடைந்துள்ளது,
இதுபோன்ற பொதுமக்களின் வாழ்வை அனைத்து கையிலும் வாட்டி வதைக்கும் கண்டித்தும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசை கண்டித்து கோஷம் எழுப்பி பதாகை கையில் ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிசாமி,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா,மாவட்ட கவுன்சிலர் பானுமதி,மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி குமார், உட்பட மகளிர் அணியினர்,இளைஞர் பாசறை மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக முக்கிய பிரதிநிதிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.