திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லா சூதாட்ட விடுதிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிடைத்த ரகசிய தகவலை எடுத்து திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதி இல்லா சூதாட்ட விடுதியில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது பணம் வைத்து சூதாடிய 28 பேர் கைது, ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி இல்லாமல் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மாவட்ட முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் சூதாட்ட விடுதிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலதிபர்கள் விவசாயிகள் அரசு ஊழியர்கள் இளைஞர்கள் தின சூதாட்ட விடுதிகளுக்கு சென்று லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.