தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சை, ஜூலை-28. தஞ்சை சீனிவாசபுரம் கிரி சாலையில் தஞ்சை சேலஞ்சர்ஸ் இரவு பந்து உள் விளையாட்டு அரங்கம் துவக்க விழா தஞ்சை நகர அம்மா பேரவை அவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்.அன்பழகன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் முன்னாள் தஞ்சை நகர அம்மா பேரவை அவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இந்தியன் பேங்க் ஓய்வு அதிகாரி சோமசுந்தரம், சுகாதார மேற்பார்வையாளர் ஓய்வு கருப்பையா, பிரிதிவி ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு தஞ்சை சேலஞ்சர்ஸ் இரவு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
விழாவில் தஞ்சை ஏ-டு-இசட் மருத்துவமனையின் சேர்மேனும், நீலகிரி ஊராட்சி மன்ற தலைவருமான ஆர்.பாஸ்கரன் வள்ளியம்மை, நீலகிரி ஊராட்சி மன்ற சார்பில் தஞ்சை சேலஞ்சர்ஸ் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்திற்கு தூய குடிநீர் வசதிக்காக வேண்டி ரூ.25,000 நன்கொடையாக வழங்கினார்.
தொடர்ந்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே காலம் சென்ற ராஜி கௌசல்யா திருவுருவ படத்தை திறந்து வைத்தார். பின்னர் ஆடுகளத்தை தொழிலதிபர் ஆசிப் அலி திறந்து வைத்தார். விழாவில் குத்து விளக்கை பாம்பே ஸ்வீட்ஸ் சேர்மன் சுப்பிரமணிய சர்மா, பா.ஜ.க. தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், பா.ஜ.க .தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் இரா.முரளிதரன் ஆகியோர் ஏற்றி வைத்து சிறப்பித்தார்கள்.
விழாவில் வக்கீல் செல்வராஜ், கமலஹாசன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சரவணன், வெங்கடேஷ், செந்தில் குமார், எஸ் .ஆர் .சரவணன் மேனகா, கள்ளப் பெரம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி.ஆர். மகேந்திரன் உள்பட பலர்ர் கலந்து கொண்டனர். ஆடிட்டர் ரவிச்சந்திரன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி நன்றி கூறினார்.