விருத்தாசலம் அடுத்த தொழுரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா,
எல். இளையபெருமாள் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீமுஷ்ணம் மேற்கு வட்டாரத் தலைவர் வீரப்பன், முன்னாள் வட்டார தலைவர் தமிழ்வாணன் கடலூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் புகழேந்தி கடலூர் தெற்கு மாவட்ட மாநில பொதுச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் புவனகிரி வட்டாரத் தலைவர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக AICC member தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் மணிரத்தினம் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல் மணிரத்தினம் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அரவிந்தன் மணிரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை தனசேகரன் சண்முகம் வெங்கடேசன் ராம்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார் நன்றி உரை கூறினார். நிகழ்ச்சியின் முன்னதாக பட்டாசு வெடித்தும் மலர் கிரீடம் சூட்டியும் சந்தன மாலை அணிவித்தும் மேளாதாளங்கள் முழங்க ஊர்வலமாக சிறப்பு விருந்தினரை அழைத்து வந்தனர்.