கடலூர்
மாவட்டத்தின் தலைநகரம் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையத்தை திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் காலை 7:00 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன்பதிவு வசதி செய்திட வேண்டும்
திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி(16179 16180) மஹால்(22623. 22624) விரைவு வண்டி இரவு நேரத்தில் உழவன்(16865 16866) காரைக்கால்( 16175. 16176) நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேலம்- -விருதாச்சலம்- கடலூர் துறைமுகம்( 06121. 06122) வரை வரும் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்திற்கு நீட்டிப்பு செய்திட வேண்டும்
விழுப்புரம் தாம்பரம்(06027. 06028) ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே திருச்சி கோட்டம் ரயில்வே போர்டுக்கு முன்மொழிந்து உள்ளதை ரயில்வே வாரியம் ஒப்புதல் தர வேண்டும்.
மயிலாடுதுறையிலிருந்து கோவை(12083 12084) செல்லும் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும்
சென்னை காரைக்குடி புதிய ரயில் விரைந்து இயக்கிட வேண்டும்.
விழுப்புரம்- -கடலூர் -மயிலாடுதுறை -திருச்சி இரண்டாவது ரயில் பாதையை அமைக்க நிதியை ஒதுக்கீடு செய்து பணியை துவங்கிட வேண்டும்
கடலூர்- புதுவை- சென்னை இருப்பு பாதைத்திட்டத்தை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 8 2024 காலை 10 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்த நிலையில்.
இது குறித்து கடலூர்
ஆர் டி ஒ அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
ஆர் டி ஒ (பொறுப்பு) ரவி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் வட்டாட்சியர் பலராமன் டிஎஸ்பி. பிரபு திருப்பாப்புலியூர் ஆய்வாளர் கலைச்செல்வி உதவி ஆய்வாளர் கணபதி, ரயில்வே காவல் ஆய்வாளர் நிதிஷ் குமார் உதவி ஆய்வாளர் ராஜகோபால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் கே பக்கீரான் குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் துணை மேயர் தாமரைச்செல்வன் மாவட்ட செயலாளர் செந்தில் நகர செயலாளர் செங்கதிர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் குளோப் நகர செயலாளர் நாகராஜன் திராவிட கழக மாவட்ட தலைவர் சிவக்குமார் இந்திய தேசிய காங்கிரஸ் ராமராஜ் கார்த்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக நிர்வாகி கண்ணன் கடலூர் பொதுநல அமைப்பின் செயலாளர் ரவி தமிழ்நாடு மீனவர் பேரவை மாரியப்பன் உள்ளிட்டோர் ரகலந்து கொண்டார்கள்
கூட்டத்தில் ரயில்வே நிலையத்தை பெயர் மாற்றம் செய்ய வருவாய் துறை நடவடிக்கை எடுப்பது முடிவு செய்யப்பட்டது
ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பேச்சு வார்த்தை ஆகஸ்ட் 27 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.