தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இதையொட்டி, கட்சி தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அதில் குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் இன்று சேரன்மகாதேவி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியான கல்லிடைக்குறிச்சி, புதுக்குடி, பொட்டல் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு சேரை ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
இதில் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடேசன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சொரிமுத்து, மாவட்ட அயலாக அணி அமைப்பாளர் பீர்முகமது மாவட்ட பிரதிநிதிகள் பூதத்தான், சந்தனம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அமைப்பாளர் வேல்முருகன்,தலைமை கழக பேச்சாளர் பேச்சி, கிளைச் செயலாளர்கள் செல்வம், சண்முகசுந்தரம், தட்சணாமூர்த்தி, நெசவாளர் புது காலனி கண்ணன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முருகாண்டி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஜாகீர், பொட்டல் சுப்பையா, முத்துக்குட்டி, சேரை ஒன்றிய தகவல் வெப்ப அணி அமைப்பாளர் பவுன்ராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்