இராஜபாளையம் நகர்ப்பகுதியான நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை* மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையும் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது இச்சாலையில் விரைவில் தார்ச்சாலை அமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வழியுறுத்தி வந்த நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வழிகாட்டுதலின் பேரில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகளிடம் நேரிலும் பலமுறை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தார்சாலை அமைக்குமாறு வலியுறுத்தினார்,*
இத்தொடர் முயற்சியின் பலனாக இராஜபாளையம் முதல் கிருஷ்ணன் கோவில் வரை தார்ச்சாலை அமைக்கும்பணி தொடங்கியுள்ள நிலையில் இன்று இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனை அருகில் தார்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ.பார்வையிட்டார், இந்நிகழ்வில் பணிதள பொறியாளர் மனோகரன் அவர்களிடம் தார்ச்சாலை தரமானதாக அமைக்கப்படவும் இராஜபாளையம் நகர் பகுதியில் எப்போது தார்ச்சாலை அமைக்கப்படவுள்ளது என கேட்கையில் பணிதள பொறியாளர் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரவு நேரங்களில் பணியை தொடங்கவுள்ளதாக கூறினார், அதற்கு MLA அவர்கள், நகர் பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணியை இன்று இரவே தொடங்கி இரண்டு நாட்களில் முடிக்கப்பட வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாணவரணி நாகேஷ்வரன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்