திருவாரூர் நகருக்கு உட்பட்ட மடப்புரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி
முத்தமிழ்அறிஞர் டாக்டர் கலைஞர் நற்பணி
அறக்கட்டளை தலைவரும் நகர மன்ற 16 வது வார்டு உறுப்பினருமான எஸ்.என். அசோகன் தலைமையில் நடைபெற்றது
திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் நகரக் கழக செயலாளர் ரூம் நகர மன்ற உறுப்பினருமான வாரை பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் டாக்டர் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி
பொதுமக்களுடன் புகழஞ்சலி செலுத்தினர்
நினைவேந்தல் நிகழ்ச்சியில் டாக்டர் கலைஞர் சிறுவயது முதல் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் பெண்களுக்கு சமுதாயத்தில் சமத்துவமான சட்டங்கள் இயற்றி அரசியல் கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற பாடுபட்டு ஆற்றிய பணிகள் பற்றியும் தமிழுக்காக பணியாற்றி இந்தியாவில் பெயர்பெற்ற அழியாபுகழ் கொண்ட ஒரேதலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி என வாழ்க்கை வரலாற்றை சமூக ஆர்வலர்கள் அனைத்து கட்சியினர் கூட்டத்தில் பேசினர்
நிகழ்ச்சியில் தொடர்ந்து டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி 250க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்டங்கள் முத்தமிழ் அறிஞர்
கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பாக வழங்கினர்
நிகழ்வில் அரசு வழக்கறிஞர் மணிவண்ணன் நகர மன்ற உறுப்பினர்கள் அன்வர் உசேன் பாரதிகணேசன் கமலா மதிமுக ஆரூர்சீனிவாசன் சிபிஐ தர்மதாஸ் நற்பணி மன்ற அறக்கட்டளையின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட சமூக ஆர்வலர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்