செங்கோட்டை நகராட்சி 8வது வார்டு பம்பு ஹவுஸ் பகுதியில் 9வது வார்டு, 10வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று சுமார் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட முடிக்கப்பட்ட புதிய ரேசன் கடை கட்டிட திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு கூட்டுறவு சார்பதிவாளா் ஸ்ரீவித்யா தலைமைதாங்கினார். துணைப்பதிவாளா் வித்யா, முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்எம்.ரஹீம், நகர்மன்ற உறுப்பினா்கள் பேபிரெசவுபாத்திமா, மேரிஅந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனா. செயலாளா் அருணாசலம் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் பதிவாளா், எடையாளா் வார்டு கழக நிர்வாகி எஸ்எம்.சேட், தமுமுக நிர்வாகி மப்லாசா பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.