தென்காசி மாவட்டத்தில் மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அமைச்சர் நேருவிடம் வழங்கினார்
தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் பத்தாவது வார்டு கவுன்சிலர் ரஹ்மத்துல்லா
அளித்துள்ள
கோரிக்கை மனுவில் வடகரை வாவாநகரம் பார்வதிபுரம் ஆகிய பகுதி விவசாயிகளுக்கு ஊருக்கு தெற்கு விவசாய நிலங்கள் உள்ளது விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான பாதை முன்னால் 40 அடி அகலமாக இருந்தது
தற்போது அது நான்கு அடி அகலமாக குறைந்துஉள்ளது இதனால் இந்த பகுதி விவசாயிகள் பல கிலோமீட்டர் தூரம் சென்று வயலுக்கு வர வேண்டி உள்ளது
விவசாய பொருட்களையும் பல கிலோமீட்டர் தூரம் சுமந்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது இந்த பகுதி விவசாயிகள் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்தால் அந்த வழியாக அச்சம் புதூர் வரை சென்று விடலாம்
அதேபோல திருவொற்றியூர் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
எனவே ஆக்கிரமிப்பு பகுதியாக இருக்கிற 450 மீட்டர் தூரத்தில் இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த வழியாக செல்கிற அனுமன் நதி மேல் ஒரு பாலம் அமைத்தும் பாதை அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் திருவொற்றியூர் அச்சன்புதூர் வடகரை வாவாநகரம் பார்வதிபுரம் ஆகிய பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள் மக்கள் மயான ம் செல்வதற்கும் ஏற்றதாக இருக்கும் ஆகையால் அமைச்சர் அவர்கள் அனுமன் நதி குறுக்கே பாலம் அமைத்து 450 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்பு இருக்கிற பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து உடனடியாக ஆய்வு செய்து நிதி ஒதுக்கி தருவதாக உறுதி வழங்கியுள்ளார்
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் ஒன்றிய செயலாளர் சீனித்துரை பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை ஊராட்சி மன்ற தலைவர் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுந்தர் என்ற சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்