கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டமும் ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு மன்றமும் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் விழா (08.08.2024)அன்று நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் வணிக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் மா. ஜெகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார்.

தன்னுடைய தலைமை உரையில்,மரம் வளர்த்தால் தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்கலாம். மரங்கள் வனவிலங்குகளுக்கு உணவு ஆதாரமாகவும் இயற்கை வாழ்விடமாகவும் பங்களிக்கின்றன. மரம் வளர்த்தால் மண் அரிப்பை தடுக்கலாம். ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க மாணவர்கள் முன் வர வேண்டும் என்று பேசினர். கிருஷ்ணகிரி ஆரோக்கிய பாரதி ஒருங்கிணைப்பாளர் திரு கௌதம் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இராமமூர்த்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர் நடவு செய்தனர். இவ்விழாவில் உடற்கல்வி பேராசிரியர் விஜய் ஆனந்த் அவர்களும் மற்றும் பிரேமா அவர்களும் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் ஆங்கில துறையின் உதவி பேராசிரியருமான சரவணன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *