செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் அத்திப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேசபக்தி பாடல்கள் இலவச இசைப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை வ. சாந்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சு. அசோக்குமார், ரோட்டரி கிளப் தலைவர் எஸ். செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ர.ரஹ்மத் வரவேற்றார்.
இசைப்பயிற்சி முகாமை அருவி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஜே. ரூபன் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி டிஎஸ்பி சு.கங்காதரன் பங்கேற்று, இசைப்புத்தகத்தை வெளியிட்டு, இசையின் சிறப்புகளை விளக்கிப் பேசினார். மேலும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மாணவர்கள் பயில வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்வில் ஓய்வுபெற்ற உடற் கல்வி இயக்குனர் த. சுந்தர்ராஜன், சமூக ஆர்வலர் எஸ் எஸ். சுரேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். இசைப்பயிற்சி முகாமில் பாரதியார், பாரதிதாசன், காந்தியடிகள், கொடி காத்த குமரன், காமராசர் போன்றவர்களின் பாடல்கள் இசை வாத்தியங்களுடன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இசைப் புத்தக கையேடுகள் வழங்கப்பட்டது.
இசைப் பயிற்சியை தெள்ளார் அரசு மகளிர் பள்ளி இசையாசிரியர் டி.பி.வெங்கடேசன் வழங்கினார். மிருதங்க வித்துவான் ஆராசூர் மூர்த்தி உடன் உதவி புரிந்தார். பயிற்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் செ. ரமேஷ் நன்றி கூறினார்.