நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
சித்தாய்மூர் அரசு பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைப்பெற்றது…
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தாய்மூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மாநில விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகா.குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சித்தாய்மூர், கொத்தங்குடி, கச்சநகரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இந்த முகாமில் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி கலந்துக்கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது.
இந்த முகாமில் திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் மலர்வண்ணன், துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரண்ராஜ், கலைக்குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வள்ளி சண்முகநாதன், சௌந்தரராஜன், காயத்திரி, ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன், உள்ளிட்ட அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.