மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கிட வேண்டும். ஊழியர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை இருக்க வேண் டும், 108 பணியாளர்களுக்கு கழிவறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் சிவக்குமார், வரதராஜன், காளிதாஸ், பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.