பென்னாகரம் ஒன்றியம் சத்யநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கரியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் நடைபெற்றது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த மேலாண்மைக் குழுவின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான 24 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு தேர்தல்
தலைமை ஆசிரியர் காஜாமொய்தின்
தலைமையில் நடைபெற்றது.
இக்குழுவின் தலைவராக கஸ்தூரி, துணைத்தலைவராக செல்வி உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்குழுவில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்
கல்வியாளர்கள்,
முன்னாள் மாணவ
பெற்றோர்கள்,
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதி கொண்ட குழு உருவாக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளராக சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்
மா. பழனி கலந்துக்
கொண்டார். முடிவில் ஆசிரியர்
நேதாஜி நன்றி கூறினார்.