தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகள் வாந்தி மயக்கத்தால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி
செங்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு மாணவிகள் வைத்திருந்த வாசனை திரவிய பாட்டிலை திறந்து முகர்ந்ததால் 15 மாணவிகள் வாந்தி மயக்கத்தால் சரிந்து விழுந்ததால் பள்ளி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 8 மாணவிகள் தென்காசி அரசு மருத்துவமனைக்கும் மூன்று மாணவிகள் தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்
இதனால் மருத்துவமனையில் குவிந்த மாணவிகளின் பெற்றோர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் இளவரசி தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்களை கட்டுப்படுத்தி மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கிட நடவடிக்கை எடுத்தனர்
பாதிக்கப்பட்ட மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆசிரியர்கள் மாணவர்களின் ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாணவிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தகவல் அறிந்ததும் இரவு என்றும் வராமல் விரைவாக மருத்துவமனைக்கு வந்து மாணவிகளிடம் உடல் நலம் விசாரித்தும் மருத்துவ மேல் அதிகாரிகளிடம் உடனடியாக தொடர்பு கண்டு உரிய உயரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் உடன் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் .பெரோஸ் கான் சசிகுமார் வீராணம் ஷேக் உள்பட பலர் உடன் இருந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை உடனடியாக மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்ற தமுமுக எம்எம்ஏ டிரஸ்ட் 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கிய ஓட்டுநர்களுக்கு பொதுமக்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டது காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியது