வலங்கைமான் ஸ்ரீபத்ரகாளியம்மன் மடாலயத்தில் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு படையல் மண்டகப்படி பூஜை விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் உள்ள செங்குந்தர் சமுதாயத்திற்கு சொந்தமான ஸ்ரீ பத்ரகாளியம்மன் மடாலயத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பலவகை அன்னங்கள், பலகார வகைகள், பழ வகைகள் வைத்து படையல் மண்டகப்படி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வரதர் சன்னதி தெரு ரா. செந்தில்குமார் (எஸ் எல் டிராவல்ஸ்) மற்றும் சகோதரர்கள் மற்றும் வலங்கைமான் செங்குந்தர் சமுதாயத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.