ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கமலாபுரம் கூட் ரோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அத்திப்பள்ளம் முருகர் ஆலயத்தில் நேற்று இரவு உண்டியல் திருட முயற்சி நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார்.
பூவரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் முருகர் சிலையில் இருந்த தங்கச் சங்கிலியை திருட முயற்சித்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதே பகுதியில் சமீபத்தில் டிராக்டர்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் நடந்ததால், ஊர் பொதுமக்கள் இரவு நேரங்களில் காவல் காத்து வந்தனர். இதனால் இந்த திருட்டு முயற்சியை தடுத்து நிறுத்த முடிந்தது என கூறினர்.