செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி
அலுவலகம் வளாகத்தில் மறைந்த தேமுதிக நிறுவனர்
கேப்டன் விஜயகாந்த் 72 வதுபிறந்த நாள் விழா
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் அருகே
தேமுதிக கழக கொடி ஏற்றி மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய
கழக செயலாளர் சந்திரகாந்த் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம்
வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்
ரமேஷ்பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில் ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன்,
துணைச் செயலாளர் ஏ.ஜி.தர்மா,மாவட்ட பிரதிநிதி எஸ்.சக்திவேல், சந்தோஷ்குமார்,ஒன்றிய பொறுப்பாளர் செல்வராஜ்.மற்றும் தேமுதிக நிர்வாகிகள்
கன்னியப்பன், சண்முகம், விமல், ஏழுமலை,நவீன்குமார், உட்படகழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.